சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள் மீதான தாக்குதலையடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு
சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள், சேமிப்புக் கிடங்குகள் மீதான தாக்குதலையடுத்துப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 விழுக்காடு உயர்ந்து 70 டாலர் 82 சென்ட்களாக உள்ளது.
சவூதி அரேபியாவில் அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகள், சேமிப்புக் கிடங்குகள் மீது ஏமனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் எதிரொலியாகப் பன்னாட்டுச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 2 புள்ளி ஒரு விழுக்காடு உயர்ந்து 70 டாலர் 82 சென்ட்களாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை 2019 மே மாதத்தில் இருந்த அளவை 20 மாதங்களுக்குப் பின் மீண்டும் எட்டியுள்ளது.
Comments