"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஒருமுறை சார்ஜ் செய்தால் 240கி.மீ செல்லலாம்..! ஓலா உருவாக்கவுள்ள அதிநவீன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படவுள்ள ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைத்து வரும் ஓலா, அடுத்த 3 மாதங்களில் உற்பத்தியை தொடங்கவுள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடெர்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்துடன் இணைந்துள்ள ஓலா, எடெர்கோ ஆப்ஸ்கூட்டர் அடிப்படையிலான ஈ-ஸ்கூட்டரை உருவாக்கவுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments