குமாரசாமி அரசை கவிழ்த்த 6 அமைச்சர்கள் வீடியோ தயாராம் ... ஜார்கிகோளியுடன் தனிமையில் இருந்த பெண் ரூ.25 கோடியுடன் துபாயில் செட்டில்?

0 7472
பதவி இழந்த ரமேஷ் ஜார்கிகோளி

கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளியை சிக்க வைத்த பெண் துபாயில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டதாகவும் அவருக்கு ரூ. 25 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. வேலை கேட்டு வந்த இளம்பெண் ஒருவருடன் ரமேஷ் ஜார்கிகோளி நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியானது. தொடர்ந்து, கட்சி மேலிடம் உத்தரவால் ரமேஷ் ஜார்கிகோளி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வெளியான விஷயத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ 9 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், ரஷ்யாவில் இருந்து வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் தற்போது தனது குடும்பத்தினருடன் துபாயில் தஞ்சமடைந்துள்ளதாக  சொல்லப்படுகிறது.  அந்த  இளம்பெண்ணுக்கு ரூ.25 கோடி கொடுத்து, துபாயில் சகல வசதிகளுடன் குடும்பத்துடன் வசிக்க ரமேஷ் ஜார்கிகோளியின் எதிரிகள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக  சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளியிடம் முதல்கட்ட விசாரணை நடந்தது . இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது . ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தினேஷ் கல்லஹள்ளி ரமேஷ் ஜார்கிகோளி மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கப்பன் பார்க் போலீசாரிடம் மனு கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, கர்நாடக மாநில அமைச்சர்களான ஷிவராம் ஹெப்பர், பி.சி. பாட்டீல், எஸ்.டி. சோமசேகர், கே.சுதாகர் ,கே.சி நாராயண கவுடா, பிரயாதி பசவராஜ் ஆகியோர் தொடர்புடை ஆபாச வீடியோவும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த 6 அமைச்சர்களும் நீதிமன்றத்தில் தாங்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மீடியா நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், 68 மீடியா நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் தொடர்புடைய  வீடியோக்களை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாச வீடியோவால் பதறி வரும் 6 அமைச்சர்களும் ஏற்கனவே ஆபாச வீடியோ வெளியாகி பதவி இழந்த  ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் குமரசாமியின் அரவை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சிக்கு உதவிக்கரமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி தற்போது அமைச்சர்களாக பதவி வகிப்பவர்கள் ஆவார்கள். எனவே, இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எதிரிகளின் சூழ்ச்சி செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர்கள் மட்டுமல்ல எம்.எல்.ஏக்கள் தொடர்புடைய 19 வீடியோக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், கர்நாடக அரசியல் வட்டாரம் ஆடிப் போய் கிடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments