கொரோனாவை உலக பெருந்தொற்றாக அறிவித்து மார்ச் 11 ஆம் தேதியோடு ஒரு வருடம்
உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொற்றை உலக பெருந்தொற்றாக அறிவித்து ஒரு வருடம் ஆகவுள்ளது.
கடந்த வருடம் மார்ச் 11 ஆம் தேதியன்று இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிவித்தார். அப்போது 114 நாடுகளில், 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் தொற்றால் பாதித்தும், 4 ஆயிரத்து 291 பேர் தொற்று பலியாகி இருந்தனர்.
ஆனால் தற்போது, 210 நாடுகளுக்கு பரவி சுமார் 11 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 27 லட்சத்து 9 ஆயிரத்து 195 பேர் தொற்றால் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments