ரகளையில் ஈடுபட்ட இந்தியப் பயணி: அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்
பிரான்சில் இருந்து டெல்லி வந்த விமானம் பயணியின் ரகளையால் பல்கேரியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாரிசிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர், சக பயணிகளுடன் சண்டையிட்டுக் கொண்டே வந்துள்ளார். விமான ஊழியரைத் தாக்கியதாகவும், விமானியின் அறைக் கதவைத் தட்டி, திறக்கும் படி கூறி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த விமானம் பல்கேரியாவில் உள்ள சோஃபியா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு அந்த நபர் இறக்கி விடப்பட்டார். தற்போது இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Comments