”பழைய காரை கொடுத்து புது காரை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி” -அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
பழைய காரை கொடுத்து புதிய காரை வாங்கும் நுகர்வோருக்கு மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீத தள்ளுபடியை வழங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், வரும் 2021-22 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பழைய வாகனங்களை தாமாக முன்வந்து அகற்றுவதற்கான கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு பசுமை வரி உள்பட பல வரி விதிப்புகளை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாசுக் கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறை தானாக நடக்கும் வகையில் புதிய வாகன கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்காக, நாடு முழுவதும் தகுதி சான்றிதழ் வழங்கும் மையங்களை அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments