”பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்” - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தல்
பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஸ்டேக் வாங்குவோர் குறிப்பிட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள், மைபாஸ்டேக் செயலி அல்லது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் மட்டுமே வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஓட்டுநர் உரிமம், ஆதார், கடவுச் சீட்டு, பான் கார்டு என இவற்றில் எதாவது ஒன்று மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பாஸ்டேக்கை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் போலியான பாஸ்டேக்குகள் வழங்கும் இணையதளம் குறித்து நெடுஞ்சாலை ஆணையத்தின் உதவி மையத்தில் புகார் செய்யலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments