புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; தொகுதிகளை அதிகமாகக் கேட்கும் என்.ஆர்.காங்கிரஸ்

0 2478
புதுச்சேரியில் பாஜக, அதிமுக, என் ஆர் காங்கிரஸ் கூட்டணி நாளை திங்கட்கிழமை மாலைக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் பாஜக, அதிமுக, என் ஆர் காங்கிரஸ் கூட்டணி நாளை திங்கட்கிழமை மாலைக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர்.காங்கிரசுக்கும், 10 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கும், 6 தொகுதிகள் அதிமுகவுக்கும் என முதலில் பேசப்பட்டது.

அதனை ஏற்க மறுத்து அதிக தொகுதிகள் கேட்ட என்.ஆர். காங்கிரஸ், ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனையை முன்வைத்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு என்.ஆர்.காங்கிரஸின் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 17, பாஜகவுக்கு 7 மற்றும் அதிமுகவுக்கு 6 இடங்கள் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், திங்கட்கிழமை மாலை அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments