இந்த ஆண்டும் ஊரடங்கு என நினைத்துக்கொண்டு பிரிட்டன் நகருக்குள் உலாவரும் ஆடுகள்
கொரோனா ஊரடங்கை பருவ கால விடுமுறை என நினைத்துக்கொண்ட ஆடுகள் பிரிட்டனுக்குள் படையெடுக்க தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் நடமாட்டம் குறைந்து, விலங்குகள் ஊருக்குள் சுதந்திரமாக உலா வர தொடங்கின.
கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவத்தை நினைவில் வைத்துக்கொண்ட ஆடுகள் இந்த ஆண்டும் வேல்ஸ் நகருக்குள் உலா வர தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு ஊரடங்கு இல்லை என்பதை ஆடுகளுக்கு எவ்வாறு புரியவைப்பது என அப்பகுதி குடியிருப்பாளர்கள் புலம்பல்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டுவருகின்றனர்.
Comments