என் பாரீஸ் சொகுசு மாளிகையின் சாவி எங்கே ? வருமான வரித்துறையினரின் சோதனையை கிண்டலடித்த டாப்சி

0 19599

பாரீசில் கோடையைக் கழிக்க கட்டிய சொகுசு மாளிகையின் சாவியைத் தேடி வருமான வரித்துறையினர் தம் வீட்டில் சோதனை நடத்தியதாக நடிகை டாப்சி கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் விகாஸ் பெஹல் உள்ளிட்டோருக்கு உரிய 30 இடங்களில் சோதனையிட்டு 350 கோடிக்கு மேற்பட்ட வரிஏய்ப்பு ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த சோதனை குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட டாப்சி, வருமான வரித்துறையினர் தமது சொகுசு மாளிகை மற்றும் 5 கோடி ரொக்கமாக முன்பணம் பெற்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக தெரிவித்தார்.

இதனிடையே தோபாரா படத்தில் இணைந்து டாப்சியுடன் பணியாற்றும் அனுராக் காஷ்யப் மறுபடியும் படப்பிடிப்பில் தாங்கள் இணைய உள்ளதைக் குறிக்கும் வகையில் டாப்சியுடன் உள்ள படங்களை வெளியிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments