திபெத் தலைநகர் லாசாவுக்கு புல்லட் ரயில் பாதை அமைத்த சீனா
திபெத் தலைநகர் லாசாவுக்கு ஜூலை மாதத்துக்குள் புல்லட் ரயில் வெள்ளோட்டம் விடச் சீனா திட்டமிட்டுள்ளது.
கிழக்குத் திபெத்தில் உள்ள நியிங்சி முதல் லாசா வரை 435 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு இறுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.
இறுதிக்கட்டப் பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும் என்பதால் ஜூலை மாதத்தில் லாசாவுக்கு புல்லட் ரயிலை வெள்ளோட்டம் விடச் சீன ரயில்வே திட்டமிட்டுள்ளது.
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் அருணாசலப் பிரதேசத் தலைநகர் இடாநகரில் இருந்து 374 கிலோமீட்டர் தொலைவில் லாசா உள்ளது குறிப்பிடத் தக்கது.
Comments