அதிமுக - தேமுதிக இடையே அடுத்த கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தகவல்

0 3152

திமுக - தேமுதிக இடையேயான அடுத்த கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  முதலில் 41 தொகுதிகள் கேட்ட தேமுதிக, தற்போது 23 தொகுதிக்கு இறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு மாநிலங்களவை இடம் மற்றும் 15 சட்டமன்ற தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றுமாலை சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் அதிமுக - தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேமுதிக சார்பில் தேர்தல் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் 2-வது நாளாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments