அடுத்த ஆண்டில் ஏர் ஏசியா ஹெலிகாப்டர் டேக்சி சேவை தொடங்கும் - தலைமைச் செயல் அதிகாரி தகவல்
ஹெலிகாப்டர் டேக்சி சேவையை அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளதாக ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் ஆசிய பசிபிக் மண்டலத்தில் 22 நாடுகளில் விமானப் போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அதன் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் இணையவழிக் கலந்துரையாடலில் பேசினார். அப்போது, நான்கு பேர் அமர்ந்து பயணிக்கும் வசதி கொண்ட ஹெலிகாப்டர் டேக்சி சேவையை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி இயக்கம் பல நாடுகளிலும் நடைபெற்று வருவதால் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பன்னாட்டு விமானப் போக்குவரத்து முழு வீச்சில் தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments