டுவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சியின் முதல் டுவீட் கோடிக்கணக்கில் ஏலம்
டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் நிறுவனர் ஜேக் டோர்சியின் முதல் டுவீட்டை 14 கோடியே 64 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டுள்ளார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தை ஜேக் டோர்சி 2006ஆம் ஆண்டு மார்ச்சில் நிறுவினார்.
அப்போது ஜஸ்ட் செட்டிங் அப் மை டுவிட்டர் என முதல் டுவிட்டைப் பதிவிட்டார். இந்த முதல் டுவிட்டர் பதிவை இணைய வழியில் ஏலம் விடுவதாக ஜேக் டோர்சி அறிவித்துள்ளார். டிரான் கிரிப்டோகரன்சி பிளாக்செயின் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ஜஸ்டின் சன் என்பவர் இதை 14 கோடியே 64 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டுள்ளார்.
Comments