அண்ணா பல்கலைக்கழக பட்ட மேற்படிப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை அமலானது.
மத்திய உயிரித் தொழில்நுட்பத்துறை சார்பில் மாநில பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் 2 எம்.டெக் படிப்புகளுக்கு எந்த இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தது.
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மத்திய அரசின் 49.9 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உத்தரவு பெற்று, மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது.
மார்ச் 5 ஆம் தேதி வெளியான பட்டியலில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.
Comments