தொகுதி பங்கீட்டில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொடரும் இழுபறி.?

0 6359

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. 13 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. 8 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக வழங்கும் தொகுதிகளை ஏற்பதா? கூடுதல் தொகுதிகளைக் கேட்பதா? எந்தெந்தத் தொகுதிகளைக் கேட்பது என்பது குறித்துச் சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட மாநில குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments