"உத்தரகாண்ட் பெரு வெள்ளத்திற்கு கனமழையும், அதிகரித்துள்ள வெப்பநிலையும் காரணம்" - ஆய்வாளர்கள் கருத்து
உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு கனமழையும், அதிகரித்துள்ள வெப்பநிலையும் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்டில் கடந்த மாதம் 7ம் தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயினர்.
இந்நிலையில், சர்வதேச வல்லுநர் குழுவினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில், சமோலி பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடந்த 40 ஆண்டுகளில் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெப்பநிலை உயர்வு ஆகியவையே வெள்ளத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை உயர்வால் மெதுவாக உருகிய பனிப்பாறைகள் திடீரென பெய்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்து நொறுங்கியதாக ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.
Comments