எட்டு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு
மகாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மீண்டும் கொரோனா அலை வேகம் எடுத்து பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி, ஹரியானா, ஆந்திரா, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமை கவலையளிப்பதாகவும் 60 மாவட்டங்களின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் இல்லாமல் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நடமாடுவதாகவும் முகக்கவசம் , சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கைகளை மதிக்காமல் காற்றில் பரவ விடுவதாகவும் கூறப்படுகிறது.
மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments