கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தபால் வாக்களிக்கலாம்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

0 3189
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தபால் வாக்களிக்கலாம்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், 12-டி விண்ணப்பத்தை பெற்று, தபால் மூலம் வாக்களிக்க பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோமில், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார். வாக்குகளை ஒருபோதும், பணத்துக்கு விற்றுவிட வேண்டாம் என, வாக்காளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த சத்யபிரதா சாகு, அதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments