திமுகவிடம் இருந்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கு மீண்டும் அழைப்பு வரவில்லை - கே.எஸ்.அழகிரி

0 5484
திமுகவிடம் இருந்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கு மீண்டும் அழைப்பு வரவில்லை - கே.எஸ்.அழகிரி

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த திமுகவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை என்றும், விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடைபெறுவதால் இன்றும் நாளையும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதைப் பார்வையிட்ட கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் 27 சட்டமன்றத் தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஆகியவற்றைக் கேட்கவும், எதிர்காலத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக உறுதிமொழி பெறவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments