லடாக் எல்லையில் படை விலக்கத்தை தொடர சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
லடாக் எல்லையில் மற்ற இடங்களிலும் படை விலக்கத்தை தொடர வேண்டுமென சீனாவை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
பீஜிங் நகரில் சீனாவின் வெளியுறவு இணை அமைச்சர் லூ சகோயியை சந்தித்த இந்திய தூதர் விக்ரம் மிசிரி, எல்லையில் சாந்தியும், சமாதானமும் நிலவுவதே இரு நாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என்றார்.
பாங்சாங்சோ ஏரியின் வட கரையில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டதை போல, பிற இடங்களிலும் இருந்து படைகளை விலக்கி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இரு நாட்டு உறவை வலுப்படுத்த எல்லையில் அமைதியும், சமாதானமும் நிலவுவது அவசியமென அவர் எடுத்துரைத்தார்.
Comments