ஒரு கழிவறையில் இரண்டு குளோசட்டுகள் அமைத்த அதிகாரிகள்: உ.பி. வினோத சம்பவம்

0 8753
ஒரு கழிவறையில் இரண்டு குளோசட்டுகள் அமைத்த அதிகாரிகள்: உ.பி. வினோத சம்பவம்

தூய்மை பாரதம் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதுமாக செலவிட வேண்டும் என்பதற்காக ஒரு கழிவறையில் இரண்டு குளோசட்டுகளை பொருத்திய வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

பாஸ்தி மாவட்டத்தில் உள்ள பியூரா என்ற கிராமத்தில் அரசு கட்டிய கழிவறையில் இந்த செயலை அதிகாரிகள் செய்துள்ளனர். இது குறித்து கேட்டதற்கு குழந்தைகளுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்ற விநோதமான பதிலையும் அதிகாரிகள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் இந்த இரட்டை குளோசட் கழிவறை வைரலானது. இந்த கட்டுமானம் பற்றி மாவட்ட நிர்வாகத்தை எதிர்கட்சிகள் வறுத்து எடுக்கும் நிலையில், இது குறித்து விசாரிக்குமாறு உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments