திமுகவிடமிருந்து பேச்சு நடத்த மீண்டும் அழைப்பு வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை

0 4527
திமுகவிடமிருந்து பேச்சு நடத்த மீண்டும் அழைப்பு வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்டப் பேச்சுக்கு அழைப்பு விடுப்பார்கள் என நம்பிக்கை இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளைக் கேட்ட நிலையில் 6 தொகுதிகளை வழங்குவதாக திமுக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாம் கட்டப் பேச்சின்போது 10 தொகுதிகள் வழங்க மார்க்சிஸ்ட் கட்சி கோரியதாகவும், 8 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் திமுக தரும் தொகுதிகளை ஏற்பதா? கூடுதல் தொகுதிகள் கேட்பதா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், திமுக தருவதாகக் கூறிய தொகுதிகளின் எண்ணிக்கையில் தங்களுக்கு உடன்பாடு இல்லாததால் இன்னும் உடன்பாடு கையொப்பமாகவில்லை எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments