இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

0 5724

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதலாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 365 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 101 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களும் சேர்த்தனர்.

160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கும் தகுதி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments