அதிமுக - தேமுதிக இடையேயான அடுத்த கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் : துணை முதலமைச்சர்

0 3588
அதிமுக - தேமுதிக இடையேயான அடுத்த கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும்

அதிமுக  - தேமுதிக இடையேயான அடுத்த கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளை ஒதுக்குமாறு தேமுதிக வலியுறுத்தி வருகிறது. ஆனால், 15 சட்டமன்ற தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை சீட் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால், மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தெரிவித்தார். 

பேச்சுவார்த்தை முடிவில் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments