ஜன.6 அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பான வழக்கு: டிரம்பின் ஆதரவாளரை கைது செய்தது FBI

0 1908

அமெரிக்க நாடாளுமன்ற வளாக கலவர சம்பவம் தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்பின் உதவியாளர் பெட்ரிகோ கெயின் என்பவரை FBI கைது செய்துள்ளது.

அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, டிரம்ப் ஆதரவாளர்கள் பலர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வழக்கில், அத்துமீறி நுழைதல், வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் பெட்ரிகோ மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.2016 அதிபர் தேர்தலில் டிரம்புக்காக பிரச்சார பணிகளில் ஈடுபட்ட இவர், டிரம்பின் வெற்றிக்குப் பிறகு வெளியுறவு அமைச்சகத்தில் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக கைதாகும் முதல் டிரம்ப் ஆதரவாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments