சிரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் : ஒருவர் உயிரிழப்பு - 11 பேர் காயம்
சிரியாவின் எண்ணெய் வயல்களை குறி வைத்து துருக்கி ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
சிரிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க துருக்கி ஆதரவு பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
துருக்கி எல்லையை ஒட்டியுள்ள சிரிய நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதால் அவை கொளுந்து விட்டு எரிந்தன.
இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சி அளித்தது.
Comments