காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது

0 2548
காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்ரவரி 25 முதல் நேற்று வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

மொத்தம் ஆயிரத்து 880 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தோரிடம் இன்றும் நாளையும் பிற்பகல் 2 மணி வரை நேர்காணல் நடத்தப்படுகிறது.

திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோர்  தலைமையில் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 பேர் உள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் கட்சியின் அமைப்பு முறையிலான 15 மாவட்டங்கள் எனப் பிரித்து நேர்காணல் நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments