காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் ,போலீசார் மீதும் தீவிரவாதிகள் ரிமோட் குண்டு தாக்குதல்

0 5124
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் ,போலீசார் மீதும் தீவிரவாதிகள் ரிமோட் குண்டு தாக்குதல்

காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் ரிமோட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

புல்வாமா மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள டேங்கர்புரா என்ற இடத்தில் உள்ள மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைத்தனர்.

தீவிரம் குறைந்த வெடிமருந்து இருந்ததால் குண்டு வெடித்தாலும் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் ஏற்படவில்லை. இதேபோல், குப்வாரா பகுதியில் உள்ள சந்தையில் போலீசாரைக் குறிவைத்து கையெறி குண்டு வீசப்பட்டது.

இதிலும் யாருக்கும் காயமில்லை. அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments