பீகார் : கள்ளச்சாராய வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கில் 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஒருவர் காலமாகி விட்டார்.
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்
Comments