டாப்சி, அனுராக் காஷ்யப், விகாஸ் பெஹல் வீடுகளில் 3 நாட்களாக சோதனை; ரூ 350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

0 3796
டாப்சி, அனுராக் காஷ்யப், விகாஸ் பெஹல் வீடுகளில் 3 நாட்களாக சோதனை; ரூ 350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

மும்பையில் அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி, இயக்குனர் விகாஸ் பெஹல் உள்ளிட்டோரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் சுமார் 350 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக பாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்கள் நட்சத்திரங்களின் வரி ஏய்ப்பு குறித்த சோதனை மும்பை, புனே, டெல்லி உள்ளிட்ட 30 இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கணக்கு காட்டாத வருவாய் குறித்து சோதனையிட்டவர்கள் விளக்கம் கூற இயலவில்லை என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments