பூமிக்கு நெருக்கமாகக் கடந்து சென்ற குறுங்கோள்; 2068ம் ஆண்டு பூமி மீது மோதுவதற்கு வாய்ப்பு என எச்சரிக்கை..!
நேற்றிரவு பூமியை சிறிய குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. எகிப்து கடவுளான காட் ஆப் கேயாஸ் எனப்படும் அபோபீஸ் என பெயரிடப்பட்டிருந்த இந்த குறுங்கோள் சுமார் 340 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்ததாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய ஆய்வகத்தாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குறுங்கோள், அடிக்கடி சூரியனைச் சுற்றி வருவதும் பூமிக்கு அருகே வந்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அபோபீஸ் குறுங்கோள் 2029ம் ஆண்டு பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரும் என்றும் 2068ம் ஆண்டில் பூமி மீது மோதுவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இந்த குறுங்கோள் மோதினால் 880 மில்லியன் டன் டிஎன்டி வெடிபொருள் வெடிக்கும் அளவிற்கு விளைவு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
Comments