அமித்ஷா நாளை தமிழகம் வருகை..! நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு

0 2656
அமித்ஷா நாளை தமிழகம் வருகை..! நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்கிறார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இரவு தங்கும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதபடை மைதானத்திற்கு வருகிறார். கார் மூலம் நாகர்கோவில் செல்லும் அவர், காலை 10.45 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பகல் 12.15 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலை வரை வாக்கு சேகரிக்கும் அவர், தொடர்ந்து 12.30 மணி முதல் 2 மணி வரை நாகர்கோவில் வடசேரியில் உள்ள உடுப்பி ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் திருவனந்தபுரம் செல்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments