திமுக - மா.கம்யூனிஸ்ட் இடையே சனிக்கிழமை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

0 3312

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே, தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர், பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 10 மணிக்கு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, திமுக அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் வரை திமுக ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments