கூட்டணியில் தொகுதி பங்கீடு முடித்து, தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக தீவிரம்..!

0 5901
அதிமுக கூட்டணியில் இரு நாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவுக்கு வருமென பா.ஜ.கவும், தேமுதிகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தொகுதி பங்கீட்டை முடித்து,தேர்தல் பணிகளை தொடங்க அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணியில் இரு நாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவுக்கு வருமென பா.ஜ.கவும், தேமுதிகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தொகுதி பங்கீட்டை முடித்து,தேர்தல் பணிகளை தொடங்க அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவுக்கு 24 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்தார். 

இதனிடையே சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, தாங்கள் 23 இடங்கள் கேட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பில் 15 இடங்களும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தர முன்வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசி வருவதாகவும், இரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்றும் அவர் தெரிவித்தார். 

சுமார் 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக அதிமுகவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடனான தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னரே தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர். இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வால்பாறை, ஈரோடு மேற்கு, பட்டுக்கோட்டை, திருப்பரங்குன்றம், காங்கேயம், திருப்பூர் தெற்கு, பண்ருட்டி ஆகிய 8 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி, அதில் 3 தொகுதிகளை தமாகா கோருவதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments