தொகுதி பங்கீட்டில் இழுபறி... என்ஆர் காங்கிரஸ் முடிவு என்ன.?

0 5516

புதுச்சேரியில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை, மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். 

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. என்ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளும், முதலமைச்சர் வேட்பாளராக தங்களது கட்சியை சார்ந்தவரே இருக்க வேண்டும் என்று கேட்பதாக கூறப்படுவதால் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், மக்கள் நலன் கருதி ரங்கசாமி பாஜக கூட்டணியில் தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்தார். சனிக்கிழமை மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையே புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க வருமாறு, எதிர்முகாமில் உள்ள என்.ஆர்.காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சரும், காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளருமான நாஜிம் அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த சூழலில், புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி உடன் மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments