முதியோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் வழங்கும் பணிகள் சென்னையில் தொடக்கம்
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்களிப்பதற்கான படிவங்களை வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது. இப்பணியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மயிலாப்பூரில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகவும் பாதுகாப்பான முறையில் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்றார்.
சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, 12 D படிவம், அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் மூலம் வீடு தேடிச்சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
உள்ளது.
Comments