ரமலான் பண்டிகையின் போது நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

0 6265
ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு, புதிய அட்டவணையை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு, புதிய அட்டவணையை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரமலான் பண்டிகை, வரும் மே 14ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், மே 13 மற்றும் மே 15ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு தேதியை மாற்றக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மே 15ஆம் தேதி நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு கணிததேர்வு, மே 21ஆம் தேதிக்கும், 13ஆம் தேதி நடைபெறவிருந்த 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments