திருவண்ணாமலையில் வாட்ஸ்அப், டெலிகிராமிற்கு இணையான செயலியை உருவாக்கி அசத்திய 8 ஆம் வகுப்பு மாணவன்
திருவண்ணாமலை காந்தி நகரில் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றிற்கு இணையான ஒரு செயலியை 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்னும் மாணவன் கொரோனா விடுமுறையில் இதனை உருவாக்கியுள்ளார். ஏற்கனவே ஜாவா, சி++ ஆகியன தெரிந்திருந்ததால் இணையதளம் மற்றும் You tube வழியாக செயலியின் குறியீடுகளை உருவாக்கி அதற்கு ஹைடெக் சேட் (High tech chat) என பெயரிட்டு தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதில் பேசுவது மட்டுமின்றி புகைப்படங்கள்,வீடியோ கால்கள், வீடியோக்கள் பகிர்வதோடு 25 ஆயிரம் பேர் வரை இதில் குழுவாக இணைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments