அரியலூர் வாகன சோதனையில் ரூ.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்

0 3859
அரியலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்‍.

அரியலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்‍. 

கும்பகோணத்திலிருந்து அரியலூர் நோக்கி வந்த டெம்போ வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

வாகனத்தில் 5 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், அதனை பாரத ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச்செல்வதாகவும் வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவிக்க, அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வாகனத்துடன் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

உரிய ஆவணங்களை காட்டி வாகனத்துடன் பணத்தை மீட்க, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments