வன்னியர்கள் பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வரவிருந்த வன்னியர்களுக்கான பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 பிரிவினருக்கு வெறும் 2.5% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் எனக் கூறியுள்ள மனுதாரர், சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments