வீட்டில் முடங்கியிருப்பது பலவீனத்தை ஏற்படுத்துகிறது... 98 வயதில் சுண்டல் விற்கும் முதியவரின், தன்னம்பிக்கையை பாராட்டிய உத்தரப்பிரதேச மாவட்ட நிர்வாகம்.!
உத்தரப்பிரதேசத்தில் தள்ளாடும் வயதிலும் உழைத்து சாப்பிடும் முதியவரை அழைத்து மாவட்ட நிர்வாகம் கவுரவித்துள்ளது. ரெபரேலியில் வசிக்கும் 98 வயதான விஜய் பால் தெருவோரத்தில் சுண்டல் விற்று வருகிறார்.
வீட்டில் முடங்கியிருப்பது பலவீனத்தை ஏற்படுத்துவதாக முதியவர் விஜய் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து அவரை அழைத்த மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவஸ்தா, முதியவரின் தன்னம்பிக்கையை பாராட்டி, அவருக்கு பரிசாக 11 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வாக்கிங் ஸ்டிக் மற்றும் பொன்னாடை உள்ளிட்டவை வழங்கி கவரவித்தார்.
முதியவர் விஜய்க்கு ரேஷன் கார்டு மற்றும் கழிப்பறை கட்ட நிதி வழங்கியிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவஸ்தா தெரிவித்தார்.
A 98 yr old man who sells chana outside his village in UP’s Rae Bareli was felicitated yesterday by @VaibhavIAS .The gentleman’s story gained traction after this viral video shot by a customer where he can be heard saying this is not out of compulsion but to stay fit ... pic.twitter.com/oLokIr3dMj
Comments