வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களை குஷிப்படுத்த டோர் டெலிவரி செய்யப்படும் இசை கச்சேரி
ஜெர்மனியில் இசை கச்சேரி வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்பட்டுவருகிறது.
கொரொனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நடத்தப்படும் இசை கச்சேரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஃபிராங்க்ஃபுர்ட் நகரிலுள்ள இசை குழு ஒன்று வீட்டிற்கே சென்று இசை கச்சேரி நடத்திவருகிறது.
இணையதளம் மூலம் முன்பதிவு செய்வோருக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வீட்டிற்கே சென்று கச்சேரியை அரங்கேற்றிவருகிறது.
Comments