பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பியை உடனடியாக கைது செய்க - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

0 2797
பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. மற்றும் பெண் எஸ்.பி.யை புகார் கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்.பியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. மற்றும் பெண் எஸ்.பி.யை புகார் கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்.பியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதற்கு திமுக கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகாரளித்து 13 நாட்கள் கழிந்து விட்ட நிலையிலும், இன்னும் ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒருவேளை தாமதித்தால் தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments