ஒரே வண்டியில் 6 பேர்; நடுரோட்டில் சர்க்கஸ் காட்டிய இளைஞர்கள்... நடவடிக்கை எடுக்க உத்தரவு!

0 6044

கோவையில் இருசக்கர வாகனத்தில் 6 பேர் அமர்ந்து பயணித்து சாகசம் செய்த வீடியோ வைரலானதையடுத்து, போக்குவரத்தை மீறிய குற்றத்துக்காக ஆறு பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை அருகே இருசக்கர வாகனம் ஒன்றில் 6 பேர் அமர்ந்து பயணிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், TN 37 AX 7228 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் 6 ஆறு பேர் பயணம் செய்வது பதிவாகியிருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டும் நபருடன் 3 பேர் அமர்ந்தும், இருவர் நின்ற நிலையிலும் சென்று கொண்டிருந்தனர். இதனை இரு சக்கர வாகனத்தின் பின்னால் சென்ற கார் ஒன்றிலிருந்து வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வீடியோ எடுத்தவர்கள் பேச்சின் மூலம் குறிப்பிட்ட இருசக்கர வாகனம் சரவணம்பட்டி பகுதியில் சென்றது தெரியவந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் குறிப்பிட்ட இரு சக்கரவாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும், சாலையில் சாகசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறி பைக்கில் சாகசம் காட்டிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments