அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை

0 2041
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடுவதை உறுதி செய்யக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் முதல் முன்னுரிமையாக மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது முன்னுரிமையாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பிற நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் அதிகப்பட்சமாக 250 ரூபாய் என்கிற கட்டணத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY