மியன்மார் சர்வாதிகார ராணுவத் தலைமை, அமைச்சகங்களுக்கு அமெரிக்கா தடை

0 2678
மியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.

மியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது.

ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 38 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வெளியிட்ட கருப்புப் பட்டியலில் மியான்மர் பொருளாதார நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பர்மாவின் ராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமைதியான போராட்டங்களை ராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்பு யுத்தம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments