ஆவின் பால் பாக்கெட்டில் தவளை... அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் புகார்!

0 132563

வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவர் நேற்று மாலையில் திருக்கோவிலூர் தெற்கு தெருவில் பாஸ்கர் என்பவர் நடத்திவரும் ஆவின் பாலகத்தில், பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

பின்னர், வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்தபோது, உள்ளே இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.  அதிர்ச்சியடைந்த சிவநேசன் ஆவின் முகவர் பாஸ்கரிடம் முறையிட்டுள்ளார். இந்த தகவலை பாஸ்கரன், விழுப்புரம் மாண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் தெரிவித்தார். தொடர்ந்து தவளை இருந்த பால் பாக்கெட்டை வாங்கி சென்ற சிவநேசன் என்பவரது வீட்டில் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வரும் ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்தது திருக்கோவிலூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments