பொதுத்துறை நிறுவனமான விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு; ஆந்திரத்தில் மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம்
பொதுத்துறை நிறுவனமான விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆந்திரத்தில் மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
35ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புடன் ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதைக் கண்டித்து உருக்காலைப் பாதுகாப்புப் போராட்டக் குழு இன்று மாநிலந் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்குத் தெலுங்குதேசம், இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மாநில அரசும் போராட்டத்தை ஆதரித்துப் பகல் ஒரு மணி வரை அரசுப் பேருந்துகளை இயக்குவதில்லை என அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. உணவகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
Comments