கர்நாடக சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கை முன் சட்டையைக் கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட்

0 2238
கர்நாடக சட்டசபைக்குள் சபாநாயகர் இருக்கை முன் சட்டையைக் கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட்

ர்நாடக சட்டசபைக்குள் சட்டையைக் கழற்றிக் காட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக நடந்த விவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ், சபாநாயகர் இருக்கைக்கு முன் சென்று சட்டையைக் கழற்றினார். இதற்கு ஆளும் கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் சங்கமேஷ், அவையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷை வரும் 12ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments